×

லாக்கர்: விமர்சனம்

கதையின் நாயகன் விக்னேஷ் சண்முகத்துக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ ஆசை. இதற்காக தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க அனுப்பப்படும் பணத்தை நூதனமான முறையில் கொள்ளை அடிக்கிறார். அடுத்து அவர் ஷேர் மார்க்கெட் பிசினசில் மோசடி வேலையை ஆரம்பிக்கிறார். இந்த நேரத்தில் அவர் நாயகி நிரஞ்சனி அசோகனை சந்தித்து காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் விக்னேஷ் மோசடி பேர்வழி என்று தெரிந்ததும் அவரிடமிருந்து விலகுகிறார் நிரஞ்சனி. இதனால் விக்னேஷ் மோசடி பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டு திருந்துகிறார்.

மீண்டும் அவரை ஏற்றுக் கொள்ளும் நிரஞ்சனி அந்த ஊரிலேயே செல்வாக்குடன் இருக்கும் தாதாவிடம் 6 கோடி ரூபாய் தங்கத்தை கொள்ளை அடிக்கச் சொல்கிறார். மோசடியை விரும்பாத நிரஞ்சனி இந்த கொள்ளையை நடத்தச் சொல்வது ஏன்? அது நடந்ததா? இல்லையா? என்பது மீதி கதை. சிறு பட்ஜெட்டில் பரபரப்பான ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படத்தை தர முயற்சித்திருக்கிறார்கள் அறிமுக இயக்குனர்கள் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன். நாயகன் விக்னேஷ் சண்முகம் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார்.

வில்லன்களால் அடிபட்டு வேதனைப்படும் காட்சிகள், நாயகி தன்னை பிரியும்போது படும் வேதனை என்று கிடைக்கிற கேப்பில் நடிப்பு திறன் காட்டியிருக்கிறார். நாயகி நிரஞ்சனி அசோகனுக்கு நடிக்க நிறைய வாய்ப்பு. சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். உடன் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்கள். மற்ற கேரக்டரில் நடித்திருக்கிறவர்கள் சுமாரான நடிப்பையே தந்திருக்கிறார்கள். தணிகை தாசனின் ஒளிப்பதிவும், வைகுந்த் ஸ்ரீனிவாசனின் பின்னணி இசையும் படத்திற்கு உதவி இருக்கிறது. கதையை வேகமாக நகர்த்த திடீர் திடீரென திணிக்கப்படும் திருப்பங்கள் செயற்கையாக இருக்கிறது. மொத்த வில்லன்கள் கூட்டத்தை ஒரு சிறிய வெடிகுண்டால் ஒழிப்பதும், அதில் விக்னேஷ், நிரஞ்சனி மட்டும் தப்பிப்பதும் கொள்ளை அடிக்க சுரங்கம் தோண்டுவதும் லாஜிக்காக இல்லை. என்றாலும் பல சொதப்பல் சிறு படங்களுக்கு மத்தியில் இது பரவாயில்லை ரகம்.

The post லாக்கர்: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vignesh Shanmughat ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஸ்டார் விமர்சனம்